சொற்றொறும் இற்று இதன் பெற்றி என்று = சொல் தோறும் இத்தன்மைத்து இதன் இலக்கணம் என்று , அனைத்தும் முற்றமொழிகுறின் முடிவு இல ஆதலின் = முழுதும் நிறைவுறச் சொல்லப் புகுந்தால் முடிவு இலவாம் ஆதலால் , சொற்றவற்று இயலான் = எடுத்துச் சொல்லப்பட்ட சொற்களுடைய இலக்கணங்களைக் கொண்டு , மற்றைய பிறவும் தெற்றென உணர்தல் = சொல்லப்படாத வற்றின் இலக்கணங்களையும் ஒப்புமைகருதி இதுவும் அதுவென உணர்தல் தெள்ளியோர் திறன் = நூல் ஓதித் தெளிதற்கு உரிய மாணாக்கரது கடனாம். இவற்றிற்கும் உதாரணம் முன் வந்தன காண்க. 20
|