எழுத்தியல்

இடைநிலை மயக்கம்
வேற்றுநிலை மெய்ம்மயக்கத்திற்குச் சிறப்பு விதி

 
112ஞநமுன் றம்மினம் யகரமொ டாகும்.
 
ஆறுமுகநாவலர் காண்டிகையுரை
 
ஞ ந முன் தம் இனம் யகரமொடு ஆகும் - ஞகர நகரங்களின் முன் அவற்றிற்கு இனமாகிய சகர தகரங்களும் யகரமும் மயங்கும் .

கஞ்சன் , உரிஞ் யாது எனவும் ,
கந்தன் , பொருந் யாது எனவும் வரும் .