எழுத்தியல்

இடைநிலை மயக்கம்
வேற்றுநிலை மெய்ம்மயக்கத்திற்குச் சிறப்பு விதி

 
113டறமுன் கசப மெய்யுடன் மயங்கும்.
 
ஆறுமுகநாவலர் காண்டிகையுரை
 
ட ற முன் க ச ப மெய் உடன் மயங்கும் - டகர றகரங்களின் முன் க , ச , ப என்னும் மூன்று மெய்களும் இணங்கி மயங்கும் .

கட்கம் , கட்சி , திட்பம்
எனவும் ,
கற்க , கற்சிறார் , கற்ப
எனவும் வரும் .