எழுத்தியல்

இடைநிலை மயக்கம்
வேற்றுநிலை மெய்ம்மயக்கத்திற்குச் சிறப்பு விதி

 
114ண ன முன் னினங்கச வவ்வரும்.
 
ஆறுமுகநாவலர் காண்டிகையுரை
 
ண ன முன் - ணகர னகரங்களின் முன் , இனம் அவற்றிற்கு இனமாகிய டகர றகரங்களும் , க ச ஞ ப ம ய வ வரும் - ககரம் முதலிய இவ்வேழு மெய்களும் மயங்கும்.

விண்டு , வெண்கலம் , வெண்சோறு , வெண் ஞமலி , வெண்பல் , வெண்மலர் , மண் யாது , மண் வலிது
எனவும்,
புன்றலை, புன்கண், புன்செய், புன்ஞமலி, புன்பயிர், புன்மலர், பொன் யாது, பொன் வலிது
எனவும் வரும் .