த ட ற ஒற்று இன் - தகர டகர றகர மெய்களும் இன் என்னும் குற்று ஒற்றும் , ஐம்பால்மூவிடத்து இறந்த காலம் தரும் தொழில் இடைநிலை - ஐம்பால் மூவிடங்களிலும் இறந்த காலத்தைக் காட்டும் வினைப் பகுபதங்களினுடைய இடைநிலைகளாகும். நடந்தான், நடந்தாள், நடந்தார், நடந்தது, நடந்தன, நடந்தேன், நடந்தோம், நடந்தாய், நடந்தீர். எனவும், உண்டான் எனவும், சென்றான் எனவும், உறங்கினான் எனவும் வரும். சிறுபான்மை இன் இடைநிலை எஞ்சியது எனக் கடை குறைந்தும், போனது என முதல் குறைந்தும் வரும் .
|