மெய்யீற்றுப் புணரியல்

மெய்யீற்றின் முன் உயிர்

 
205தனிக்குறின் முன்னொற் றுயிர்வரி னிரட்டும் .
 
ஆறுமுகநாவலர் காண்டிகையுரை
 
தனிக் குறில் முன் ஒற்று = தனிக் குற்றெழுத்தின் முன் நின்ற மெய் , உயிர் வரின் இரட்டும் = உயிர் வரின் இரட்டித்து நிற்கும்.

மண் + அரிது = மண்ணரிது
பொன் + அரிது = பொன்னரிது எனவும்,
மண் + அகம் = மண்ணகம்
பொன் + ஒளி = பொன்னொளி எனவும் வரும்.

இது மேலைச் சூத்திரத்தால் எய்தியதன்மேல் சிறப்பு விதி, உயிர் ஏற இடங்கொடுத்தலே அன்றி இரட்டித்தும் நிற்கும் என்றலின்.