தமிழ் வேற்றுமைக்கு அ உறவும் பெறும் - தமிழ் என்னும் சொல் நாற்கணமும் வரின் வேற்றுமைக்கண் அகரச் சாரியை பொருந்தவும் பெறும் , தாழும் கோல் வந்து உருமேல் அற்று - தாழ் என்னும் சொல்முன் கோல் என்னும் சொல் வந்துபொருந்துமாயின் அவ் அகரச்சாரியை பெறும். தமிழப்பிள்ளை , தமிழ நாயகன் , தமிழ வளவன், தமிழ வரசன் எனவும் , தாழக்கோல் எனவும் வரும். தமிழை உடைய பிள்ளை தாழைத் திறக்கும்கோல் எனவிரியும். [தாழக்கோல் = திறவுகோல்.] இது எய்தாதது எய்துவித்தல்.
|