தன்மை யான் நான் யாம் நாம் = தன்மைப்பெயர் நான்காவன யான் , நான் , யாம், நாம் என்பனவாம், முன்னிலை எல்லீர் நீயிர் நீவிர் நீர் நீ = முன்னிலைப்பெயர் ஐந்தாவன எல்லீர் , நீயிர் , நீவிர் , நீர் , நீ என்பனவாம் ,அல்லன படர்க்கை = இவ் ஒன்பதும் அல்லாத பெயர்கள் எல்லாம் படர்க்கை இடத்திற்கு உரியனவாம் ,எல்லாம் எனல் பொது = அவற்றுள் எல்லாம் என்னும் பெயர் ஒன்றும் மூ இடத்திற்கும் உரித்தாம். எல்லாம் என்பது மூவிடத்தும் வருமாறு :- யாம் எல்லாம், நீர் எல்லாம், அவர் எல்லாம், அவை எல்லாம் என வரும். 28
|