வினையியல்

முற்றுவினை
இருதிணைப் பொதுவினை

 
330தன்மை முன்னிலை வியங்கோள் வேறிலை
உண்டீ ரெச்ச மிருதிணைப் பொதுவினை.
 
ஆறுமுகநாவலர் காண்டிகையுரை
 
தன்மை = தன்மைவினை வினைக்குறிப்பு முற்றுக்களும் , முன்னிலை = முன்னிலைவினை வினைக்குறிப்பு முற்றுக்களும் , வியங்கோள் = வியங்கோள் வினைமுற்றுகளும் , வேறு இலை உண்டு = வேறு , இல்லை , உண்டு என்னும் மூன்று வினைக் குறிப்புமுற்றுக்களும் ,ஈரெச்சம் = பெயரெச்ச வினை வினைக்குறிப்புக்களும் வினை எச்சவினை வினைக் குறிப்புக்களும், இருதிணைப் பொதுவினை = உயர்திணை அஃறிணை என்னும் இருதிணைக்கும் பொது வினைகளாம்.

செய்யும் என்னும் பெயரெச்சமே செய்யும் என்னும் முற்று ஆதலால், அம் முற்றும் இருதிணைப் பொதுவினையாம் என்பது தானே தோன்றுதல் காண்க .

11