தன் மகன் - தன் புதல்வனுக்கும் , ஆசான் மகன்- தன் ஆசிரியன் புதல்வனுக்கும் , மன் மகன் - அரசன் புதல்வனுக்கும் , பொருள் நனி கொடுப்போன் - பொருளை மிகுதியாகக் கொடுப்போனுக்கும் , வழிபடுவோன் - வழிபாடு செய்வோனுக்கும் , உரைகோள் ஆளற்கு - தன்னாற் சொல்லப்பட்ட உரையை விரைவிலே கற்கும் அறிவுடையோனுக்கும் , உரைப்பது நூல் - சொல்லப்படுவது நூலாகும் . *தொல்காப்பியம் இளம்பூரணர் உரை மேற்கோள் .
|