பொதுவியல்

வழாநிலை வழுவமைதி
இடம் வழுவாமல் காத்தல்

 
381தரல்வரல் கொடை செலல் சாரும் படர்க்கை
எழுவா யிரண்டு மெஞ்சிய வேற்கும்
 
ஆறுமுகநாவலர் காண்டிகையுரை
 
தரல் வரல் கொடை செலல் படர்க்கைசாரும் - தரல் என்பது முதலிய இந்நான்கு சொற்களையும் படர்க்கை அடையும் , எழுவாய் இரண்டும் எஞ்சிய ஏற்கும் = இவற்றுள் முதலிலே நின்ற தரல் வரல் என்னும் இரண்டு சொற்களையும் ஒழிந்த தன்மை முன்னிலைகள் ஏற்கும்.

தரல், வரல், கொடை, செலல் என்பன அவ்வப் பகுதிகளை உணர்த்தி நின்றன ஆதலால், அப்பகுதிகளால் பிறக்கும் வினைவிகற்பங்கள் அனைத்தும் கொள்க.

அவனுக்குத் தந்தான்; அவனிடத்து வந்தான்; அவனுக்குக் கொடுத்தான்; அவனிடத்துச் சென்றான் எனவும், எனக்குத் தந்தான்; என்னிடத்து வந்தான் எனவும். உனக்குத் தந்தான்; உன்னிடத்து வத்தான் எனவும் வரும்.

தரல், வரல் என்னும் இரண்டையும் தன்மை முன்னிலைக்கும் கூட்டினமையால் படர்க்கைக்கே சிறந்தன கொடை ,செல் என்னும் இரண்டும் என்பதும், ஒழிந்த தரலும் வரலும் அத்துணைச் சிறப்பின அல்ல என்பதும் பெற்றாம்.

30