எழுத்தியல்

பிறப்பு
ஐகார ஒளகாரக் குறுக்கங்கள்

 
95தற்சுட்டளபொழி யைம்மூ வழியும்
நையு மௌவு முதலற் றாகும்.
 
ஆறுமுகநாவலர் காண்டிகையுரை
 
ஐ-ஐகாரம் , தற்சுட்டு அளபு ஒழி மூவழியும் - தன்னைக் குறித்துத் தன் பெயர் சொல்லும் அளவில் குறுகாது , சொல்லுக்கு முதல் இடை கடைகளிலே எங்கே நிற்பினும் , நையும் - தன் மாத்திரையிற் குறுகும், ஒளவும் முதல் அற்று ஆகும் - ஒளகாரமும் தன் பெயர் சொல்லும் அளவில் குறுகாது சொல்லுக்கு முதலிலே தன் மாத்திரையில் குறுகும்.

ஐப்பசி , இடையன் , குவளை ,
எனவும் ,
மௌவல் எனவும் வரும்.

இடவகையால் ஐகாரக் குறுக்கம் மூன்றும் , ஒளகாரக் குறுக்கம் ஒன்றும் வருதல் காண்க .