பெயரியல்

பெயர்ச்சொல்
பன்னிரண்டு பொதுப்பெயர்

 
287தான்யா னானீ யொருமை பன்மைதாம்
யாநா மெலாமெலீர் நீயிர்நீர் நீவிர்.
 
ஆறுமுகநாவலர் காண்டிகையுரை
 
தான் யான் நான் நீ ஒருமை = தான் யான் நான் நீ என்னும் நான்கும் இருதிணை முக்கூற்று ஒருமைப் பெயர்களாம் , தாம் யாம் நாம் எலாம் எலீர் நீயிர் நீர் நீவிர் பன்மை = தாம் , யாம் , நாம் , எல்லாம் , எல்லீர் , நீயிர் , நீர் , நீவிர் என்னும் எட்டும் இருதிணை இருகூற்றுப் பன்மைப் பெயர்களாம்.

இருதிணை முக்கூற்று ஒருமை என்றது உயர்திணை ஆண் ஒருமை உயர்திணைப் பெண் ஒருமை அஃறிணை ஒருமைகளை.

இருதிணை இருகூற்றுப்பன்மை என்றது உயர்திணைப் பன்மை அஃறிணைப் பன்மைகளை.

30