எழுத்தியல்

பெயர்
இனம் என்றதற்குக் காரணம்

 
72தான முயற்சி யளவு பொருள்வடி
வானவொன் றாதியோர் புடையொப் பினமே.
 
ஆறுமுகநாவலர் காண்டிகையுரை
 
தானம் - பிறப்பிடமும் , முயற்சி - தொழிலும் , அளவு - மாத்திரையும் , பொருள் - பொருளும் , வடிவு - உருவமும் , ஆன ஒன்று ஆதி ஓர் புடை ஒப்பு - ஆகிய இவற்றுள் ஒன்று முதலாக ஒரு புடை ஒத்தலால் , இனம் - இனமாம் .

முன் காரணம் விளங்காமல் கூறப்பட்ட இனம் என்றதை இங்கே காரணம் காட்டி முடிவு செய்தலால் , இச்சூத்திரம் ஏதுவின் முடித்தல் என்னும் உத்தி .

ஆய்தம் தனிநிலை யாதலாலும் , மற்றைச் சார்பு எழுத்துக்களுக்கு அவ் அவற்றின் முதல் எழுத்துக்களின் பெயர்களே பெயர்களாய் அடங்குதலாலும் சார்புஎழுத் துக்களுக்குப் பெயர் சொல்லாது விட்டார்.