திணை பால் இடம் பொழுது வினா இறை மரபு ஆம் ஏழும் - இருதிணையும் ஐம்பாலும் மூவிடமும் முக்காலமும் வினாவும் விடையும் பலவகை மரபுகளும் ஆகிய ஏழும், மயங்கின் வழு ஆம் = தத்தம் நெறி மயங்கின் வழுவாம். திணை முதலிய அனைத்தும் மரபாம் ஆயினும் , இங்ஙனம் விதவாது ஒழிந்தனவற்றை மரபு எனக்கொள்க வென்பார், அதனை இறுதியிலே சொன்னார். மரபாவது தொன்றுதொட்டு வழங்கும் முறைமை. (வ - று) 1. அவன் வந்தது...............................திணை வழு. 2. அவன் வந்தாள்...............................பால் வழு. 3. யான் வந்தான்...................................இட வழு. 4. நாளை வந்தான்.................................கால வழு. 5. கறக்கின்ற எருமை பாலோ சினையோ?......................வினா வழு. 6. கடம்பூர்க்கு வழியாது? எனின் இடம்பூணி யென்னாவின் கன்றன்று என்பது | .விடை வழு. | 7. யானைமேய்ப்பானை இடையன் ஆடுமேய்ப் பானைப் பாகன் என்பன | மரபு வழு. |
இவ்வாறே எழுவகை வழுக்களையும் உணரந்து வழக்கின் உள்ளும் செய்யுள் உள்ளும் அவை வாராமல் நீக்குக. இடம்பூணி - இடப்பக்கத்தில் பூட்டப்பட்ட எருது. 24
|