ஈமும் கம்மும் உருமும் = ஈம், கம், உரும் என்னும் மூன்று சொல்லும் , தொழிற்பெயர் மானும் = இருவழியும் முதல்நிலைத் தொழிற்பெயர் போல யகரம் அல்லாத மெய்கள் வரின் உகரச் சாரியை பெற்று முடியும் , முதலன வேற்றுமைக்கு அவ்வும் பெறும் - இவற்றுள்ளே முதற்கண் நின்ற ஈமும் கம்மும் வேற்றுமைக்கண் உகரச்சாரியை அன்றி அகரச்சாரியையும் பெறும் . ஈமுக்கடிது, கம்முக்கடிது, உருமுக்கடிது நீண்டது, வலிது எனவும் கடுமை , நீட்சி, வன்மை எனவும் , ஈமக்குடம் , கம்மக்குடம் எனவும் வரும். [ ஈம்=சுடுகாடு. கம்=கம்மியரது தொழில். உரும்=இடி.] இது "மவ்வீ றொற்றழிந்து" என்னும் சூத்திரத்தால் எய்தியது விலக்கிப் பிறிதுவிதி வகுத்தல்.
|