ஈ தா கொடு எனும் மூன்றும் = ஈ தா கொடு என்னும் மூன்று சொற்களும் , முறையே இழிந்தோன் ஒப்போன் மிக்கோன் இரப்புரை - முறையே இழிந்தவனும் ஒப்பவனும் உயர்ந்தவனும் இரத்தற்கு வரும் சொற்களாகும் . எனவே , 'ஈ' என்பது இழிந்தோன் உயர்ந்தோனிடத்து இரக்கும் இரப்புரையும் , ' தா ' என்பது உயர்ந் தோன் இழிந்தோனிடத்து இரக்கும் இரப்புரையுமாம் எனக் கொள்க . தந்தாஈ - இழிந்தோன் இரப்பு . தோழா தா = ஒப்போன் இரப்பு மைந்தா கொடு = உயர்ந்தோன் இரப்பு என வரும் . பிறவழி வரும் ஒப்பு உயர்வு தாழ்வுகளிலும் இப்படியே ஒட்டுக. 56
|