து று டுக் குற்றியலுகர ஈற்ற = து ,று, டு என்னும் மூன்று விகுதிகளையும் இறுதியிலு டைய குற்றியலுகர ஈற்று மொழிகள், ஒன்றன் படர்க்கை = அஃறிணை ஒன்றன்பால் படர்க்கை வினைமுற்றும் குறிப்புமுற்றுமாம் , டுக் குறிப்பின் ஆகும் = இவற்றுள் டுவ் விகுதி குறிப்புவினைமுற்றில் அன்றித் தெரிநிலை வினைமுற்றில் வாராது. றுவ் விகுதி இறந்தகால இடைநிலையோடு மாத்திரம் கூடி வரும் எனக்கொள்க. இ. தெரி. | நி. தெரி. | எ. தெரி. | குறி | நடந்தது | நடக்கின்றது | நடப்பது | குழையது | } | அது | கூயிற்று | ------ | ------ | அற்று | ------ | ------ | ------ | பொருட்டு |
றுவ் விகுதி, வந்தன்று , உண்டன்று, சென்றன்று எனத் த ,ட , ற ஒற்று இடைநிலைகளின் முன்னும், புக்கன்று, விட்டன்று, பெற்றன்று என விகாரப் பட்டு இறந்தகாலம் காட்டும் கு , டு, று ஈற்றுப் பகுதிகளின் முன்னும், அன் சாரியை பெற்று வரும். இவை, முறையே வந்தது, உண்டது, சென்றது, புக்கது, விட்டது , பெற்றது எனப் பொருள்படும். றுவ் விகுதி, கூயிற்று. ஓடிற்று என இன் இடைநிலையின் முன் மாத்திரம் சாரியை பெறாது வரும். தந்தின்று என றுவ் விகுதி தகர இடைநிலையின் முன் இன் சாரியை பெற்றதன்றோ எனின் , அன்று : அது தந்தன்று என்னும் உடன் பாட்டுவினையை மறுத்தற்குத் தகர இடைநிலைக்கும் றுவ் விகுதிக்கும் இடையே இல் என்னும் எதிர்மறை இடைநிலை ஏற்று வந்த மறைவினை என்று அறிக. தத்தின்று தந்தது இல்லை எனப் பொருள் படும். அற்று , இற்று , எற்று என்பவை , சுட்டினும் வினாவினும் வந்த வினைக்குறிப்பு முற்றுகள். இவை , முறையே அத் தன்மைத்து , இத்தன்மைத்து , எத்தன்மைத்து எனப் பொருள் படும். 9
|