உயிரீற்றுப் புணரியல்

குற்றுகர வீற்றுச் சிறப்புவிதி

 
187தெங்குநீண் டீற்றுயிர் மெய்கெடுங் காய்வரின்.
 
ஆறுமுகநாவலர் காண்டிகையுரை
 
காய்வரின் - காய் என்னும் சொல் வருமாயின் , தெங்கு நீண்டு ஈற்று உயிர்மெய் கெடும் - தெங்கு என்னும் நிலைமொழி முதல் நீண்டு ஈற்றிலுள்ள உயிர்மெய் நீங்கும் .

தெங்கு+ காய் = தேங்காய் என வரும் .

கெட்டே புணரும் என்னாமையால் தெங்கங்காய் என வருவதும் கொள்க.