தெவ் என் மொழி தொழிற்பெயர் அற்று -தெவ் என்னும் பகையை உணர்த்தும் பெயர் யகரம் அல்லாத மெய்களோடு புணரும் இடத்துத் தொழிற்பெயர் போல உகரச் சாரியை பெற்று முடியும் , மவ்வரின் வஃகான் மவ் வும் ஆகும் - மகர மெய் வரின் உகரச் சாரியை பெறுதலேயன்றி ஒரோவிடத்து வகரமெய் மகர மெய்யாகத் திரியவும் பெறும். 1. தெவ்வுக்கடிது, தெவ்வுமாண்டது, தெவ்வுவலிது எனவும் தெவ்வுக்கடுமை, தெவ்வுமாட்சி, தெவ்வுவலிமை எனவும் இருவழியும் உகரச் சாரியை பெற்றது. 2. தெவ்வுமன்னர், தெம்மன்னர் எனவும், தெவ்வுமுனை, தெம்முனை எனவும் இரு வழியும் மகர மெய் வர உகரச் சாரியை பெற்றும், மகர மெய்யாகத் திரிந்தும் வந்தது.
|