இடையியல்

இடைச்சொல் பொருள்கள்

 
421தெரிநிலை தேற்ற மையமுற் றெண்சிறப்
பெதிர்மறை யெச்சம் வினாவிழை வொழியிசை
பிரிப்புக் கழிவாக்க மின்னன விடைப்பொருள் .
 
ஆறுமுகநாவலர் காண்டிகையுரை
 
தெரிநிலை = தெரிநிலையும் , தேற்றம் - தெளிவும் , ஐயம் - சந்தேகமும் , முற்று - முற்றும் , எண் = எண்ணும் , சிறப்பு = சிறப்பும் , எதிர்மறை = எதிர்மறையும் , எச்சம் - எச்சமும் , வினா = வினாவும் , விழைவு = விருப்பமும் , ஒழியிசை = ஒழிந்த சொல்லும் , பிரிப்பு = பிரிநிலையும் கழிவு = கழிவும் , ஆக்கம் = ஆக்கமும் , இன்னை = இவை போல்வன பிறவும் , இடைப்பொருள் - தத்தம் பொருள என்ற இடைச்சொற்களுடைய பொருள்களாம் .

இன்னன என்றதனால் சில வருமாறு :-
1. அ , இ , உ என்பன சுட்டுப்பொருளைத் தருவன .

2. எ , ஏ, யா , ஆ , ஓ என்பன வினாப்பொருளைத் தருவன .
3. முன் , பின் என்பன காலப்பொருளையும் இடப்பொருளையும் தருவன .
4. இனி என்பது கால இடங்களின் எல்லைப் பொருளைத் தருவது .
5. தொறும் , தோறும் , என்பன இடப்பன்மைப் பொருளையும் தொழில் பயில்வுப் பொருளையும் தருவன.
6. வாளா , சும்மா என்பன பயன் இன்மைப் பொருளைத் தருவன .
7. ஆவது , ஆதல் , ஆயினும், தான் என்பன விகற்பப் பொருளைத் தருவன . 8. ஐயோ, அந்தோ முதலியவை இரக்கப் பொருளைத் தருவன.
9. ஆ , அம்ம , ஓ , ஓகோ முதலியவை வியப்புப் பொருளைத் தருவன .
10. கூகூ , ஐயோ முதலியவை அச்சப்பொருளைத் தருவன .
11. சீ , சிச்சீ , சை முதலியவை இகழ்ச்சிப் பொருளைத் தருவன.
குறிப்பின்வரும் இடைச் சொற்கள் வருமாறு :-

1. அம்மென , இம்மென , கோவென , சோவென , துடுமென , ஒல்லென , கஃறென , சுஃறென எனவும் , கடகடென , களகளென , திடுதிடென , நெறுநெறென , படபடென எனவும் வருவன ஒலிக்குறிப்புப் பொருளைத் தருவன
2. துண்ணென , துணுக்கென , திட்கென , திடுக்கென என்றால் போல்வன அச்சக் குறிப்புப் பொருளைத் தருவன.
3. பொள்ளென , பொருக்கென , கதுமென , ஞெரேலென , சரேலென என்றால்போல்வன விரைவுக் குறிப்புப் பொருளைத் தருவன.

2