வினையியல்

வினையெச்சம்
வினையெச்சம் இனைய என்பது

 
342தொழிலுங் காலமுந் தோன்றிப் பால்வினை
ஒழிய நிற்பது வினையெச் சம்மே.
 
ஆறுமுகநாவலர் காண்டிகையுரை
 
தொழிலும் காலமும் தோன்றி = பின்பு விதந்து சொல்லப்படும் வாய்ப்பாடுகளிலே தொழிலும் காலமும் விளங்கி, பால்வினை ஒழிய நிற்பது = வினைமுற்றுதற்கு வேண்டும் பால் ஒன்றும் தோன்றாது அப்பாலுடனே வினை எஞ்ச நிற்பன , வினையெச்சம் = வினையெச்ச வினை வினைக்குறிப்புக்களாகும்.

வினை எனப் பொதுப்படக் கூறினமையால், உடன்பாடும் எதிர்மறையும் பற்றி வரும் தெரிநிலையும் குறிப்பும் ஆகிய வினைமுற்றும், பெயர் எச்சமும், வினையெச்சமும், வினையாலணையும் பெயரும் , தொழிற் பெயருமாகிய ஐவகை வினைச்சொற்களும் கொள்க.

உண்டுவந்தான் - தெரிநிலைவினையெச்சம். அருளின்றிச்செய்தான் - குறிப்புவினையெச்சம். இவற்றுள் , உண்டு என்பது, உணல் என்னும் தொழிலும் இறந்தகாலமும் தோன்றி, அத் தொழில் நிகழ்த்துதற்கு வேண்டும் பால் தோன்றாமையும் அப்பாலுடனே வினை ஒழிய நின்றமையும் அறிக.

23