எழுத்தியல்

5. உருவம்

 
98தொல்லை வடிவின வெல்லா வெழுத்துமாண்
டெய்து மெகர வொகரமெய் புள்ளி.
 
ஆறுமுகநாவலர் காண்டிகையுரை
 
எல்லா எழுத்தும் தொல்லை வடிவின - எல்லா எழுத்துக்களும் பல்வேறு வகைப்பட எழுதி வழங்கும் பழைய வடிவினை உடையனவாம் , ஆண்டு எகரம் ஒகரம் மெய் புள்ளி எய்தும் - அவ் வடிவுடையனவாய் வழங்கும் இடத்து எகரமும் ஒகரமும் மெய்களும் புள்ளியைப் பெறும் .

எ, ஒ எனவும் க், ங், ச், ஞ், ட், ண் , த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன் எனவும் வரும்.