உரியியல்

இரு பொருள்களுக்கும் பொதுவாகிய தொழில்பண்பு

 
455தோன்றல் மறைதல் வளர்தல் சுருங்கல்
நீங்க லடைத னடுங்க லிசைத்தல்
ஈத லின்னன விருபொருட் டொழிற்குணம் .
 
ஆறுமுகநாவலர் காண்டிகையுரை
 
தோன்றல்....... ஈதல் = தோன்றல் ,மறைதல் ,வளர்தல் ,சுருங்கல் ,நீங்கல் ,அடைதல் ,நடுங்கல் , இசைத்தல் ,ஈதல் என்னும் ஒன்பதும்; இன்னன = இவை போல்வன பிறவும் , இருபொருட் தொழிற்குணம் = உயிர்ப்பொருளும் உயிர் அல் பொருளுமாகிய இரண்டற்கும் பொதுவாகிய தொழில் குணங்களாம்.

உயிர் தோன்றி மறைந்தது, உடல் தோன்றி மறைந்தது , நெருப்புத் தோன்றி மறைந்தது என வரும்.

14