ந இறு தொழிற்பெயருக்கு - நகரம் இறுதியாகிய முதல்நிலைத் தொழிற்பெயருக்கு , அவ்வும் ஆம் வேற்றுமை - உகரச் சாரியையே யன்றி அகரச் சாரியையுமாகும் வேற்றுமைக்கண் பொருநக் கடுமை, நன்மை, வன்மை என வரும் . [பொருநுதல் = ஒத்தல் ; அது ஒருவர் மற்றொருவர் போல வேடங்கொள்ளும் பொருநரது தொழில் , பொருநர் = கூத்தர் ] இது மேலைச் சூத்திரத்தால் எய்தியதன்மேல் சிறப்பு விதி .
|