நான்கன் மெய் = இறுதி உயிர்மெய் கெட நின்ற நான்கு என்னும் எண்ணினது னகர மெய் , ல ற ஆகும் = லகர மெய்யாகவும் றகர மெய்யாகவும் திரியும் (ஏற்புழி - ஏற்குமிடத்து . ) ஏற்புழி என்றதனால் , னகர மெய் லகரமாகத் திரிவது உயிரும் இடையினமும் வரும் இடத்தெனவும் , றகரமாகத் திரிவது வல்லினம் வருமிடத்து எனவும் மெல்லினம் வருமிடத்து னகர ஈற்றுப் புணர்ச்சி போல் முடியும் எனவும் கொள்க . நாலொன்று , நாலெடை , நாலுழக்கு , நாலடி எனவும் , நால்வட்டி எனவும் , நாற்பது , நாற்கழஞ்சு எனவும் . நான்மணி , நானாழி எனவும் வரும் .
|