எழுத்தியல்

இறுதிநிலை
எழுத்தினது முதலும் ஈறும்

 
109நின்ற நெறியே யுயிர்மெய் முதலீறே.
 
ஆறுமுகநாவலர் காண்டிகையுரை
 
நின்ற நெறியே - மெய்முன்னும் உயிர் பின்னுமாக ஒலித்து நின்ற வழியே , உயிர்மெய் முதல் ஈறு - உயிர்மெய்க்கு மெய் முதலாகும் உயிர் ஈறாகும் .

எனவே , உயிரும் ஒற்றும் ஆய்தம் முதலிய ஒன்பது சார்பு எழுத்துக்களும் ஓரெழுத்து ஆகையால் , அவற்றிற்கு முதலும் ஈறும் அவையேயர் என்பது அருத்தாபத்தியால் கூறினார் , இது எஞ்சிய சொல்லின் எய்தக் கூறல் என்னும் உத்தி. இப்படிச் சொல்லாதவை எல்லாம் சொல்லின் முடிவின் அப்பொருண் முடித்தல் என்னும் உத்தி .