மூலம்
பெயரியல்
வேற்றுமை
ஐ முதலிய உருபு ஏலாப் பெயர்கள்
294
நீயிர் நீவீர் நா னெழுவா யலபெறா.
ஆறுமுகநாவலர் காண்டிகையுரை
நீயிர் நீவீர் நான் - நீயிர் முதலாகிய இம்மூன்று பெயர்களும், எழுவாய் அல பெறா - எழுவாய் அல்லாத வேற்றுமைகளை ஏலாவாம்.