நும் தம் எம் நம் ஈறு ஆம் ம = நும் முதலிய நான்கு விகார மொழிகளுக்கும் இறுதியாகிய மகர மெய் , வரு ஞ ந = வரும் ஞகர நகரங்களாகத் திரியும் . நுஞ்ஞாண் , நுந்நூல் , தஞ்ஞாண் , தந்நூல் , எஞ்ஞாண் , எந்நூல் , நஞ்ஞாண் , நந்நூல் , என வரும் . ஞ, ன வரின்அவையாகத் திரியும் எனவே, ஒழிந்த மகரம் வரின், நும்மணி என இயல்பாம் என்பது பெற்றாம். 'மவ்வரு ஞ, ந' என்றது "மவ்வீ றொற்றழிந்து" என எய்தியது விலக்கிப் பிறிது விதி வகுத்தல்.
|