மூலம்
எழுத்தியல்
முதனிலை
பொதுவிதியுட் சிறப்புவிதி
103
உ ஊ ஒ ஓ வலவொடு வம்முதல்.
ஆறுமுகநாவலர் காண்டிகையுரை
உ ஊ ஒ ஓ அலவொடு - உ, ஊ, ஒ, ஓ, என்னும் நான்குமல்லாத எட்டு உயிர்களோடும் வ முதல்- வகரமெய் (சொல்லுக்கு) முதலாகும் .
வளி , வாளி , விளி , வீறு , வெளி , வேளை , வைகல் , வௌவு , என வரும்.