புரத்தின் உரத்தின் வளம் பெருக்கி - உடம்பின் உள் இருக்கின்ற ஞான வளத்தை வளர்வித்து , உள்ளிய தீமை வளம் முருக்கி - நினைக்கப்பட்ட தீமையாகிய அஞ்ஞான வளத்தைக் கெடுத்து , பொல்லா மரத்தின் கனக்கோட்டம் தீர்க்கும் நூல் அஃதே போல் - கெட்ட மரத்தினது மிகுதியாகிய கோணலைப் போக்குகின்ற எற்று நூலின் அம்மாட்சிமை போலவே , மாந்தர் மனக்கோட்டம் தீர்க்கும் - மனிதருடைய மனத்தினது கோணலைப் போக்கும் , நூல் மாண்பு - கல்வி நூலினது மாட்சிமை ஆனது . இதனாலும் நூல் என்றது உவமை ஆகு பெயராம் . நூன் மாண்பு பெருக்கி முருக்கி மனக்கோட்டம் தீர்க்கும் எனக் கூட்டுக .
|