உருபும் வினையும் - எட்டுவேற்றுமை உருபுகளும் மூவகை வினைச்சொற்களும், எதிர்மறுத்து உரைப்பினும= எதிர்மறுத்துச் சொல்லும் இடத்தும் , தத்தம் ஈற்(றின்) உருபின் திரியா என்ப = தத்தம் ஈற்றினின்றும் அவ்வவ் உருபினின்றும் வேறுபடா என்று சொல்லுவர் புலவர். உருபு உருபினின்றும், வினை ஈற்றினின்றும் என எதிர் நிரல் நிறையாகப் பொருள் கொள்க. உருபின்கண் எதிர்மறுத்தல் அவைகளின் பயனிலைகளை எனக் காண்க. (வ-று) சாத்தன் வாரான் ; குடத்தை வனையான் ; வாளாலெறியான் : புல்லர்க்குக் கொடான் ; நிலையினீங்கான்; பொருளின தின்மை; தீயர்கட் சேரான்; சாத்தா போகேல் எனவும், நடவான், நடவாத, நடவாது எனவும் வரும். ஒடாக்குதிரை- இதில் ஒடாத என்னும் பெயர் எச்சவீறு கெட்டது. உரையிற் கோடலால், செய - செய்யாமல், செய்யாமே, செய்யாமை என வினையெச்சமும், நடத்தல் - நடவாமை எனத் தொழிற்பெயரும், உண்ணாய் - உண்ணேல், உண்ணாதே என ஒருமை ஏவலும் ஈறு திரிந்தும் வரும் எனக் கொள்க. 3
|