உருபுபல அடுக்கினும் = வேற்றுமை உருபுகள் லிரிந்தும் தொக்கும் தம்முள் விரவிப் பலஅடுக்கி வரினும் வெவ்வேறு பலஅடுக்கி வரினும், வினை வேறு (பல) அடுக்கினும்= மூவகை வினைச் சொற்களும் வெவ்வேறு பலஅடுக்கிச் வரினும்,ஒருதம் எச்சம் ஈறு உற முடியும் = தத்தம் மெச்சம் ஒன்று இறுதியில் வர அதனோடு அனைத்து முடியும். 1. அரசனானவன் பகைவனை வாளால் வெட்டினான் என உருபுகள் விரித்து , தம்முள் விரவிப் பலவடுக்கி, வெட்டினான் என்னும் ஒருவினை கொண்டன. வாள் கைக்கொண்டான் என உருபு தொக்கு அவ்வாறு வந்தன.
2. சாத்தனையும் கொற்றனையும் வாழ்த்தினான் எனவும் , சாத்தனுக்கும் கொற்றனுக்கும் தந்தை எனவும், ஐயுருபும் குவ்வுருபும் , விரிந்து, வேறு பலஅடுக்கி, வாழ்த்தினன் என்னும் ஒருவினையும் தந்தை என்னும் ஒருபெயரும் முறையே கொண்டன. அருளற முடையான் என உருபு தொக்கு, அவ்வாறு வந்தன. 3. ஆடினான் பாடினான் சாத்தன் எனவும் இளையண் மெல்லியண் மடந்தை எனவும். வினைமுற்றம் குறிப்புமுற்றும், வேறு பலஅடுக்கிச், சாத்தான் மடந்தை என்னும் ஒரு பெயர் முறையே கொண்டன. 4. கற்ற கேட்ட பெரியோர் எனவும், நெடிய பெரிய மனிதன் எனவும், தெரிநிலைவினைப் பெயரெச்சமுங் குறிப்பு வினைப்பெயரெச்சம், வேறு பலஅடுக்கிப் , பெரியோர் மனிதன் என்னும் ஒருபெயர் முறையே கொண்டன. 5. கற்றுக் கேட்டறிந்தார் எனவும், விருப்பின்றி வெறுப்பின்றி இருந்தார் எனவும், தெரிநிலை வினையெச்சமும் குறிப்பு வினையெச்சமும், வேறு பலஅடுக்கி, அறிந்தார் இருந்தார் என்னும் ஒரு வினை முறையே கொண்டன, 4
|