உவம உருபு இலது = வினை பயன் மெய் உரு என்பவற்றைப் பற்றி வரும் உவம உருபுகள் தொக்க தொடர் மொழிகள் , உவமத்தொகை = உவமத் தொகைகளாம். புலிக் கொற்றன், குருவி கூப்பிட்டான் - வினை உவமத் தொகை. மழைக்கை, கற்பக வள்ளல் - பயன் உவமத்தொகை துடியிடை, குரும்பை முலை - மெய் உவமத் தொகை பொற் சுணங்கு, பவள வாய் - உரு உவமத் தொகை மரகதக் கிளிமொழி, இருண் மழைக் கை - பன்மொழித்தொடர்இவை, விரியும் இடத்துப் புலிபோலும் கொற்றன், மழைபோலும்கை, துடிபோலும் இடை, பொன் போலும் சுணங்கு, மரகதம் போலும் கிளிபோலும் மொழி என விரியும். செயப்படுபொருள் குறித்த இடத்துப், புலியைப்போலும் கொற்றன் என ஐஉருபும் உடன் விரியும். 15
|