உவப்பினும் = மகிழ்ச்சியினாலும் , உயிர்வினும் - மேன்மையினாலும், சிறப்பினும் - சிறப்பினாலும் , செறலினும் - கோபத்தினாலும் , இழிப்பினும் - பழிப்பினாலும் , பால் திணை இழுக்கினும் இயல்பு = பாலும் திணையும் வழுவி வரினும் இயல்பாம். பால் : 1.தன் புதல்வனை என்னம்மை வந்தாள் என்பது, உவப்பினால் ஆண்பால் பெண்பால் ஆயிற்று.
2. ஒருவனை ' அவர் வந்தார் ' என்பது, உயர்வினால் ஒருமைப்பால் பண்மைப்பால் ஆயிற்று. 3. "தாதாய் மூவேழ் உலகுக்குந் தாயே" என்பது சிறப்பினால் ஆண்பால் பெண்பால் ஆயிற்று. 4. "எனைத்துணைய ராயினு மென்னாந் தினைத்துணையுந் தேரான் பிறனில் புகல்" என்பது, செறலினால் பன்மைப்பால் ஒருமைப்பால் ஆயிற்று. 5. பெண்வழிச் செல்வானை நோக்கி 'இவன் பெண் ' என்பது, இழிப்பினால் ஆண்பால் பெண்பால் ஆயிற்று. திணை1. ஓரு பசுவை ' என்னம்மை வந்தாள் ' என்பது , உவப்பினால் அஃறிணை உயர்திணை ஆயிற்று. 2." செந்தார்ப் பசுங்கிளியார் சென்றார்க்கோ ரின்னுரை தந்தாரேற் றந்தாரென் னின்னுயிர்' என்பது உயர்வினால் அஃறிணை உயர்திணை ஆயிற்று. 3."தம்பொரு ளென்பதம் மக்கள்" என்பது சிறப்பினால் உயர்திணை அஃறிணை ஆயிற்று. 4."ஏவவுஞ் செய்கலான் றான்றேரா ஆனவ்வுயிர் -போஒ மளவுமோர் நோய்" என்பது செறலினால் உயர்திணை அஃறிணை ஆயிற்று. 5.நாமரனுடைமை என்பது இழிப்பினால் உயர்திணை அஃறிணை ஆயிற்று. இனிச் " சொற்றொறு மிற்றிதன் பெற்றி " என்பதனாலே, புதல்வனை 'அப்பன் வந்தான்' என்றும், புதல்வியை 'அம்மை வந்தாள்' என்றும், வழங்கும் மரபு வழுவமைதிகளும் கொள்க. 28
|