எழுத்தியல்

எண்
முதலெழுத்தின் விரி

 
59உயிரு முடம்புமா முப்பது முதலே
 
ஆறுமுகநாவலர் காண்டிகையுரை
 
உயிரும் - உயிரெழுத்துப் பன்னிரண்டும் , உடம்பும் - மெய்யெழுத்துப் பதினெட்டும் , ஆம் முப்பதும் முதல் - ஆகிய முப்பது எழுத்தும் முதல் எழுத்தாம்.