|
| எழுத்தியல் எண் சார்பு எழுத்தின் விரி | | 60 | உயிர்மெய் யாய்த முயிரள பொற்றள பஃகிய இஉஐஒள மஃகான் தனிநிலை பத்துஞ் சார்பெழுத் தாகும். | | ஆறுமுகநாவலர் காண்டிகையுரை | | உயிர்மெய் - உயிர்மெய்யும்; ஆய்தம் - ஆய்தமும்; உயிரளபு - உயிரளபெடையும் , ஒற்றளபு - ஒற்றளபெடையும் , அஃகிய இ - குற்றியலிகரமும் , ( அஃகிய ) உ - குற்றியலுகரமும் , (அஃகிய) ஐ - ஐகாரக் குறுக்கமும் , ( அஃகிய ) ஒள - ஒளகாரக் குறுக்கமும் , ( அஃகிய ) மஃகான் - மகரக் குறுக்கமும் , (அஃகிய) தனிநிலை - ஆய்தக் குறுக்கமும் , பத்துஞ் சார்பெழுத்து ஆகும் - ஆகிய பத்துஞ் சார்பு எழுத்தாகும் . அஃகுதல் - சுருங்குதல் , தனிநிலை - ஆய்தம் .
|
|