மூலம்
எழுத்தியல்
பிறப்பு
முதல் எழுத்துக்களுக்கு முயற்சிப் பிறப்பு
78
உ ஊ ஒ ஓ ஒளவிதழ் குவிவே.
ஆறுமுகநாவலர் காண்டிகையுரை
உ ஊ ஒ ஓ ஒள - உ , ஊ , ஒ , ஓ , ஒள ஐந்தும் பிறத்தற்கு ஏதுவாகிய முயற்சி , இதழ் குவிவு - உதடுகள் குவிதலாம் .