பொதுப்பாயிரம்

நூலினது வரலாறு
உத்தி இன்னது என்பது

 
15நூற்பொருள் வழக்கொடு வாய்ப்பக் காட்டி
ஏற்புழி யறிந்திதற் கிவ்வகை யாமெனத்
தகும்வகை செலுத்துதல் தந்திர வுத்தி .
 
ஆறுமுகநாவலர் காண்டிகையுரை
 
நூற் பொருள் - ஒரு நூலால் அறிவிக்கப்படும் பொருளை , வழக்கொடு வாய்ப்பக் காட்டி - நூல் வழக்கோடும் , உலக வழக்கோடும் பொருந்தக் காண்பித்து , ஏற்புழி அறிந்து - ஏற்கும் இடத்தை அறிந்து , இதற்கு இவ்வகை ஆம் எனத் தகும் வகை செலுத்துதல் - இவ் இடத்திற்கு இப்படியாகும் என்று நினைத்துத் தக்கபடியாகச் செலுத்துவது , தந்திர வுத்தி - தந்திர உத்தியாம் .

தந்திரம் என்பது நூல் ; உத்தி என்பது பொருந்துமாறு .