|
| பொதுப்பாயிரம் பொதுப்பாயிரம் இன்னது என்பது | | 3 | நூலே நுவல்வோ னுவலுந் திறனே கொள்வோன் கோடற் கூற்றா மைந்தும் எல்லா நூற்கு மிவைபொதுப் பாயிரம் .
| | ஆறுமுகநாவலர் காண்டிகையுரை | | நூல் (திறன்) - நூலினது வரலாறும் , நுவல் வோன் ( திறன்) - ஆசிரியனது வரலாறும் , நுவலும் திறன் - அவ் வாசிரியன் மாணாக்கனுக்கு நூலைச் சொல்லுதலின் வரலாறும் , கொள்வோன் ( திறன் ) - மாணாக்கனது வரலாறும் , கோடற் கூற்று - அவன் கேட்டலின் வரலாறும் , ஐந்தும் எல்லா நூற்கும் ஆம் - ஆகிய இவ்வைந்தும் எல்லா நூல்களுக்குமாம் , இவை பொதுப்பாயிரம் - ஆதலால் இவ் ஐந்து வரலாற்றையும் விளங்க உணர்த்துவது பொதுப்பாயிரமாம் .
|
|