நெல்லும் செல்லும் கொல்லும் சொல்லும் - நெல் முதலிய நான்கு சொற்களின் ஈற்று லகர மெய் , அல்வழியானும் றகரம் ஆகும் - பொது விதியால் உறழாது அல்வழிக்கண்ணும் வேற்றுமை போல றகர மெய்யாகத் திரியும் . நெற்கடிது , செற்கடிது , கொற்கடிது , சொற்கடிது , சிறிது , தீது , பெரிது என வரும் . [ செல் = மேகம் , கொல் = கொல்லன் ] இதுவும் " லளவேற் றுமையிற் றடவும் " ( சூ . 227 ) என்னும் சூத்திரத்தால் எய்தியது விலக்கிப் பிறிது விதி வகுத்தல் .
|