|
| பொதுப்பாயிரம் நூலினது வரலாறு ஓத்து இன்னது என்பது | | 16 | நேரின மணியை நிரல்பட வைத்தாங் கோரினப் பொருளை யொருவழி வைப்ப தோத்தென மொழிப வுயர்மொழிப் புலவர் . | | ஆறுமுகநாவலர் காண்டிகையுரை | | நேர் இன மணியை நிரல் பட வைத்து ஆங்கு - ஒரு சாதியாய் உள்ள மணிகளை வரிசையாகப் பதித்தாற் போல , ஓரினப் பொருளை ஒரு வழி வைப்பது - ஒரு சாதியாய் உள்ள பொருள்களை ஒரு வழிப்படச் சொல்வது , ஓத்து என மொழிப - ஓத்து உறுப்பாம் என்று சொல்லுவர் , உயர் மொழிப் புலவர் - உயிர்க்கு உறுதி பயக்கும் மெய்ம் மொழிகளை யுடைய புலவர் . நேர்தல் - ஒன்றுபடுதல் .
|
|