பன்னீர் உயிரும் - பன்னிரண்டு உயிர் எழுத்துக்களும் , க ச த ந ப ம வ ய ஞ ங ஈரைந்து உயிர் மெய்யும் - ககர முதல் ஙகரம் ஈறாகச் சொல்லப்பட்ட பத்து உயிர் ஏறிய மெய்யெழுத்துக்களும், மொழி முதல் - சொல்லுக்கு முதலாகும் . அடை , ஆடை , இடை , ஈடு , உடை , ஊடல் , எடு , ஏடு , ஐயம் , ஒதி , ஓதி , ஒளவியம் எனவும் களி , சவடி , தளிர் , நலம் , படை , மலை , வளம் , யவனர் , ஞமலி , அங்ஙனம் எனவும் வரும். உயிர் போலத் தனித்து முதலாக மாட்டாமையால் , உயிர்மெய் என்றார்; இது இன்னது அல்லது இது என மொழிதல் என்னும் உத்தி .
|