பகாப்பதம் ஏ(ழெழுத்து) ஈறு ஆக - பகாப்பதங்கள் இரண்டெழுத்து முதல் ஏழெழுத்து ஈறாகவும் , பகுபதம் ஒன்பது எழுத்து ஈறுஆக - பகுபதங்கள் இரண்டெழுத்து முதல் ஒன்பதெழுத்து ஈறாகவும் , தொடரும் என்ப - தொடரும் என்று சொல்லுவர் புலவர். அணி , அறம் , அகலம் , அருப்பம் , தருப்பனம் , உத்திரட்டாதி எனவும் கூனி , கூனன் , குழையன் , பொருப்பன் , அம்பலவன் , அரங்கத்தான் , உத்திராடத்தான் , உத்திரட்டாதியான் எனவும் வரும் . நடத்துவிப்பிக்கிறான் எனப் பகுதி முதலிய உறுப்பு வேறுபட்டு வருவனவற்றிற்கு இவ் வரையறை இல்லை என்றறிக .
|