தன் சொல் பஞ்சியா - தன் சொற்கள் பஞ்சாகவும் , பனுவல் இழை ஆக - செய்யுள் இழையாகவும் , செஞ்சொற் புலவன் சேயிழையா - சொற்களை அறிந்த புலவன் நூற்கின்ற பெண்ணாகவும் , எஞ்சாதவாய் கையாக - குறையாத வாய் கையாகவும் , மதி கதிர் ஆக - அறிவு கதிராகவும் , மை இலா நூல் முடியும் ஆறு - குற்றமில்லாத கல்வி நூலானது முடியும் வழி இது . ஆதலால் , நூலென்றது உவமை ஆகுபெயர் எனக் காண்க.
|