வினையியல்

ஒழிபு
செய்யுமென் முற்று

 
348பல்லோர் படர்க்கை முன்னிலை தன்மையிற்
செல்லா தாகுஞ் செய்யுமென் முற்றே.
 
ஆறுமுகநாவலர் காண்டிகையுரை
 
ஆகும் செய்யும் என் முற்று = செய்யும் என்னும் எச்சத்தாலாகும் செய்யும் என்னும் முற்றானது, பல்லோர் படர்க்கை முன்னிலை தன்மையில் செல்லாது = உயர்திணைப் பன்மைப் படர்க்கையிலும் முன்னிலையிலும் தன்மையிலும் செல்லாது.

எனவே, பலர் ஒழிந்த படர்க்கை நாற்பாலிலும் செல்லும் என்பது பெற்றாம்.

அவனுண்ணும் , அவளுண்ணும், அதுவுண்ணும், அவையுண்ணும் என வரும்.

29