பல் வகை உதவி வழிபடு பண்பின் அல்லோர்க்கு - நீர் விடுகை முதலாகிய பலவகை உபகாரங்களையும் செய்து தனக்கு வழிபாடு செய்யும் குணத்தின் இன்றும் அல்லாத பிறருக்கு , அளிக்கும் அது - தன் இடத்துள்ள காய்களைத் தரும் குற்றம் உடையது , முடத்தெங்கு - வேலிக்கு அப்புறம் வளைந்த தென்னைமரம் . பொருள் கொடுத்தல் முதலாகிய பல வகை உபகாரங்களையும் செய்து தமக்கு வழிபாடு செய்யும் குணத்தினின்றும் அல்லாத மாணாக்கருக்குத் தம்மிடத்தில் உள்ள கல்விப் பொருளைத் தரும் குற்றம் உடையவர் ஆசிரியர் ஆகாதவர் ஆதலால் , முடத்தெங்கு அவருக்கு உவமானம் ஆயிற்று .
|