உரியியல்

உரிச்சொல்லின் பொது இலக்கணம்

 
442பல்வகைப் பண்பும் பகர்பெய ராகி
ஒருகுணம் பலகுணந் தழுவிப் பெயர்வினை
ஒருவா செய்யுட் குரியன வுரிச்சொல்.
 
ஆறுமுகநாவலர் காண்டிகையுரை
 
பல்வகைப் பண்பும் பகர் பெயர் ஆகி = இசையும் குறிப்பும் பண்பும் ஆகிய பல்வேறு வகைப்பட்ட பண்புகளையும் உணர்த்தும் பெயராகி , ஒருகுணம் பலகுணம் தழுவி = அவ்வாறு உணர்த்தும்போது ஒருசொல் ஒரு குணத்தை உணர்த்துவனவும் பல குணங்களை உணர்த்துவனவுமாய் , பெயர் வினை ஒருவா = பெயர் வினைகளை விட்டு நீங்காவாய் , செய்யுட்கு உரியன உரிச்சொல் = செய்யுளுக்கு உரியவையாய்ப் பொருட்கு உரிமை பூண்டு நிற்பவை உரிச்சொற்களாம்.

இசை = ஒசை. குறிப்பு = மனத்தால் குறித்து உணரப்படுவது. பண்பு = பொறியால் உணரப்படும் குணம்.

1