|
| உரியியல் உயிர் அல் பொருள்களின் குணப்பண்பு | | 454 | பல்வகை வடிவிரு நாற்றமை வண்ணம் அறுசுவை யூறெட் டுயிரல் பொருட்குணம் | | ஆறுமுகநாவலர் காண்டிகையுரை | | பல்வகை வடிவு = வட்டம் ,இருகோணம் ,முக்கோணம் ,சதுரம் முதலிய பலவகை வடிவுகளும் , இருநாற்றம் = நற்கந்தம் துர்க்கந்தம் என்னும் இருநாற்றங்களும் , ஐவண்ணம் = வெண்மை ,செம்மை , கருமை ,பொன்மை ,பசுமை என்னும் ஐந்து வண்ணங்களும் , அறுசுவை = கைப்புப் ,புளிப்புத் , துவர்ப்பு ,உவர்ப்புக் ,கார்ப்பு ,இனிப்பு என்னும் அறுசுவைகளும் , ஊறு எட்டு = வெம்மை , தண்மை ,மென்மை ,வன்மை ,நொய்மை ,சீர்மை , இழுமெனல் , சருச்சரை என்னும் எட்டு ஊறுகளும் , உயிர் அல் பொருள் குணம் உயிர் அல்லாத பொருள்களின் உடைய குணங்களாம். 13
|
|