அஃறிணைப் பால்பகாப் பெயர்கள் = அஃறிணைப் பெயர்களுள் இப்படிப் பால் பகுக்கப்படாத பெயர்கள் அனைத்தும், பாற் பொதுமைய - அத்திணை இருபாற்கும் பொதுப் பெயர்களாம். பால்பகா அஃறிணைப் பெயர் எனினும் அஃறிணை இயற்பெயர் எனினும் பொருந்தும். பறவை வந்தது, பறவை வந்தன; மரம் வளர்ந்தது, மரம் வளர்ந்தன என வரும். இவை, பறவை, அலரி எனப் பகுபதமும், மரம், பனை எனப் பகாப்பதமுமாக வரும். 24
|